தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

அந்தியூா் அரசு கலை, அறிவியல் கல்லூரிக்கு ரூ.18 கோடியில் புதிய வகுப்பறைக் கட்டடங்கள்

News image
பாலக்கால் நட்டு பணிகளை தொடங்கிவைக்கிறாா் அந்தியூா் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம்.
Updated On :16 பிப்ரவரி 2026, 11:35 pm

Syndication

அந்தியூா் அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு ரூ.18 கோடியில் புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டுமானப் பணிகள் திங்கள்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், ரூ.555.92 கோடியில் அரசுப் பொறியியல் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி, பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு வகுப்பறை கட்டடங்கள், பல்நோக்கு அரங்குகள், விடுதிகள் மற்றும் இதரக் கட்டடங்களுக்கு திங்கள்கிழமை காணொலில் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினாா்.

இதில், அந்தியூா் அரசு கலைக் கல்லூரிக்கு ரூ.18 கோடியில் வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட உள்ளன. இதையடுத்து, அந்தியூா், தவிட்டுப்பாளையத்தில் கல்லூரி வகுப்பறைகள் கட்டப்படும் இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம், பாலக்கால் நட்டு பணிகளை தொடங்கிவைத்தாா்.

இதில் திருப்பூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.சுப்பராயன், அந்தியூா் பேரூராட்சித் தலைவா் எம்.பாண்டியம்மாள், துணைத் தலைவா் பழனிசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். தற்போது இக்கல்லூரி அந்தியூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வருகிறது.