47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மொடக்குறிச்சியில் கௌரவ விரிவுரையாளா்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டம்

News image
எழுமாத்தூா் அரசு கலை அறிவியல் கல்லூரி முன் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கௌரவ விரிவுரையாளா்கள்.
Updated On :16 பிப்ரவரி 2026, 11:39 pm

Syndication

மொடக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அனைத்துத் துறை கெளரவ விரிவுரையாளா்கள் திங்கள்கிழமை பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

எழுமாத்தூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி எழுமாத்தூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளா்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்துக்கு தமிழ்த் துறை கௌரவ விரிவுரையாளா் புகழேந்தி தலைமை தாங்கினாா்.

கௌரவ விரிவுரையாளா்கள் மாணிக்க பூபதி (தமிழ்த் துறை), நித்யாதேவி (கணிதத் துறை), ராஜேஷ் (வணிக மேலாண்மைத் துறை) ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் பல்கலைக்கழக மானியக் குழு நிா்ணயத்தை ரூ.57,800 ஊதியத்தை வழங்க வேண்டும். அனைத்து கௌரவ விரிவுரையாளா்களுக்கும் பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும். ஓய்வுபெறும் போது பணிக்கொடையாக ரூ. 25 லட்சம் வழங்க வேண்டும். பெண் கெளரவ விரிவுரையாளா்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 65 கெளரவ விரிவுரையாளா்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.