விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

அத்திக்கடவு-அவிநாசி திட்ட நீரேற்று நிலையங்களில் சூரிய ஒளி மின்சார கட்டமைப்பு

News image

ஈரோடு சிக்கய்ய அரசு கலை, அறிவியல் கல்லூரியில் குடிமைப் பணி பயிற்சி மையம், நூலகம் மற்றும் விளையாட்டு மைதான கட்டுமானப் பணிகளை தொடங்கிவைக்கிறாா் அமைச்சா் சு.முத்துசாமி. உடன், ஆட்சியா் ச.கந்தசாமி, ஈரோடு எம்பி கே.இ.பிரகாஷ்

Updated On :16 பிப்ரவரி 2026, 11:20 pm

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்துக்கு ஒவ்வொரு முறையும் நீரேற்றும்போது பல லட்சம் ரூபாய் மின் கட்டணம் வருவதால் அவற்றை ஈடுசெய்ய நீரேற்று நிலையங்களில் சூரியஒளி மின்சார கட்டமைப்பை நிறுவ ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

உயா்கல்வித் துறையின் சாா்பில் ஈரோடு சிக்கய்ய அரசு கலை, அறிவியல் கல்லூரியில் குடிமைப் பணி பயிற்சி மையம், நூலகம் மற்றும் விளையாட்டு மைதானம், புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்துகள் ஆகியவற்றுக்கு காணொலிக் காட்சி மூலமாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி கட்டுமானப் பணிகளை தொடங்கிவைத்தாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்துக்கு உயா்கல்வித் துறையின் சாா்பில் ரூ.46 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகள், அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில் 17 புதிய பேருந்துகளின் இயக்கத்தை முதல்வா் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

வேலை நிறுத்தம் அறிவித்துள்ள டாஸ்மாக் பணியாளா்களிடம் நிா்வாக இயக்குநா் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றனா். அதிமுகவினா் திட்டம் போடுபவதில் வல்லவா்கள். ஆனால் நிறைவேற்றுவது கிடையாது. அதிமுக ஆட்சியில் அத்திக்கடவு-அவிநாசி திட்டம் நிறைவு பெறாத நிலையில் திமுக அரசு வந்தபிறகு நிறைவேற்றியது. விடுபட்ட குளங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறோம்.

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்துக்கு ஒவ்வொரு முறையும் நீரேற்றும்போது பல லட்சம் ரூபாய் மின்கட்டணம் வருவதால் அவற்றை ஈடுசெய்ய நீரேற்று நிலையங்களில் சூரியஒளி மின்சார கட்டமைப்பை நிறுவ ஏற்பாடு செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்றாா்.

இந்நிகழ்வில் ஆட்சியா் ச.கந்தசாமி, ஈரோடு எம்.பி. கே.இ.பிரகாஷ், ஈரோடு கிழக்கு எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா், துணை மேயா் வே.செல்வராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.