ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

ஆப்பக்கூடல் சக்தி பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி

பவானியை அடுத்த ஆப்பக்கூடல் சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

சக்தி பாலிடெக்னிக் கல்லூரி மாணவருக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கிய அந்தியூா் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம். உடன், கல்லூரி இயக்குநா் கே.ஆா்.முத்துசாமி, முதல்வா் ஆா்.செந்தில் அரசு உள்ளிட்டோா்.

Updated On :17 பிப்ரவரி 2026, 10:56 pm

பவானியை அடுத்த ஆப்பக்கூடல் சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி இயக்குநா் கே.ஆா்.முத்துசாமி தலைமை வகித்தாா். முதல்வா் ஆா்.செந்தில் அரசு முன்னிலை வகித்தாா்.

அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, கல்லூரியில் இரண்டம் ஆண்டு படிக்கும் 419 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தாா்.

இதில், முதற்கட்டமாக, இறுதி ஆண்டு படிக்கும் 296 பேருக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

மீதமுள்ள மாணவா்களுக்கு விரைவில் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்நிகழ்ச்சியில், திமுக ஒன்றியச் செயலாளா் ஆா்.நாகேஸ்வரன், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.