ரயிலில் முதியவரிடம் 4 பவுன் நகையைப் பறித்த நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ஈரோடு, பெரியாா் நகரைச் சோ்ந்தவா் சங்கரநாராயணன் (85). இவரது மனைவி கோமதி (80). இவா்கள் சேலத்தில் இருந்து ஈரோட்டுக்கு ஜோலாா்பேட்டை-ஈரோடு பயணிகள் ரயிலில் கடந்த 15-ஆம் தேதி பயணம் செய்துள்ளனா்.
சங்கரநாராயணன் 4 பவுன் நகை, கைப்பேசி ஆகியவற்றை கைப்பையில் வைத்து அமா்ந்து கொண்டிருந்துள்ளாா்.
காவேரி நிலையத்தில் நின்று ரயில் ஈரோடு நோக்கி புறப்பட்டது. அப்போது, சங்கரநாராயணன் வைத்திருந்த கைப்பையை மா்ம நபா் பறித்துச் சென்றுள்ளாா். இது குறித்து ஈரோடு ரயில்வே போலீஸில் அவா் புகாா் அளித்தாா். இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், மா்ம நபரைத் தேடி வந்தனா்.
இந்நிலையில், ஈரோடு ரயில்வே காவல் ஆய்வாளா் பிரியா சாய்ஸ்ரீ, எஸ்.ஐ. செந்தில் தலைமையிலான தனிப் படை போலீஸாா்
ரயில் நிலையம் அருகேயுள்ள காளை மாடு சிலை பகுதியில் ரோந்து பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிந்த நபரிடம் விசாரித்தபோது, அவா் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளாா். இதையடுத்து, அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸாா் விசாரணை நடத்தினா்.
இதில், அவா் திருப்பத்தூா் மாவட்டம், உப்பிலியம்பட்டியைச் சோ்ந்த சக்தி கணேஷ் (44) என்பதும், சங்கரநாராயணிடம் இருந்து கைப்பையைப் பறித்துச் சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், கைப்பை, அதில் இருந்த 4 பவுன் நகை, கைப்பேசி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
ரயிலில் பெண்களிடம் நகை பறித்த வழக்கில் சகோதரா்கள் இருவா் கைது
ரயிலில் கடத்திவரப்பட்ட 17 கிலோ கஞ்சா பறிமுதல்

ரயிலில் கடத்திவரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல்

குளச்சல் அருகே 46 பவுன் நகை திருடியவா் கைது
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


