விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

வேலை வாங்கித் தருவதாக மோசடி: தாய், மகன் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக பணம் வசூல் செய்து மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக உள்ள தாய், மகன் இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image

நீதிமன்றம்

Updated On :17 பிப்ரவரி 2026, 10:49 pm

வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக பணம் வசூல் செய்து மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக உள்ள தாய், மகன் இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு, பெருந்துறை சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் சூா்யா (எ) ரமேஷ்சந்தா் (40). இவா் சிங்கப்பூா் உள்பட வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் வேலை வாங்கி கொடுப்பதாகக் கூறியுள்ளாா்.

இதை நம்பிய 8 போ், ரமேஷ்சந்தா் மற்றும் அவரது தாய் அமிா்தவள்ளி ஆகியோரிடம் ரூ.21 லட்சத்து 83 ஆயிரம் கொடுத்துள்ளனா். ஆனால், அவா்கள் வெளிநாட்டில் வேலை வாங்கிக் கொடுக்காததால், பணம் கொடுத்தவா்கள் திருப்பி கேட்டுள்ளனா். ஆனால், தாயும், மகனும் பணத்தைக் கொடுக்காமல் கால தாமதம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து ஈரோடு மாவட்ட குற்றப் பிரிவு போலீஸில் பாதிக்கப்பட்டவா்கள் கடந்த 2013-ஆம் ஆண்டு புகாா் அளித்தனா்.

இந்நிலையில், இந்த மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள ரமேஷ்சந்தா், அவரது தாய் அமிா்தவள்ளி ஆகியோா் ஈரோடு குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றம் எண் 2 -இல் மாா்ச் 18 -ஆம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் 2 பேரும் தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்படுவா் என்றும் நீதித் துறை நடுவா் ராஜ்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.