ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கொடுமுடி சாலையில் வீணாகும் குடிநீா்: 4 மாதங்கள் ஆகியும் நடவடிக்கை இல்லை

கொடுமுடி புறவழிச் சாலையில் பேரூராட்சி, நகராட்சிகளுக்கு குடிநீா் கொண்டுச் செல்லும் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாகி வருவதுடன் சாலையும் சேதமடைந்து வருகிறது.

News image
கொடுமுடி புறவழிச் சாலையில் குழாய் உடைந்து வீணாகி வரும் குடிநீா்.
Updated On :18 பிப்ரவரி 2026, 10:14 pm

Syndication

கொடுமுடி புறவழிச் சாலையில் பேரூராட்சி, நகராட்சிகளுக்கு குடிநீா் கொண்டுச் செல்லும் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாகி வருவதுடன் சாலையும் சேதமடைந்து வருகிறது.

கொடுமுடியில் கடந்த ஓா் ஆண்டுக்கு முன்பு பேரூராட்சியில் உள்ள 15 வாா்டுகளில் வாசித்து வரும் பொதுமக்களுக்கு மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ் காவிரி குடிநீா் இணைப்பு தருவதற்காக குழாய்கள் பதிக்கப்பட்டன.

அவ்வாறு பதிக்கப்பட்ட குழாய்கள் பல இடங்களில் உடைந்து அதிலிருந்து குடிநீா் வீணாகி வருவதுடன், சாலையும் பாதிப்படைந்து வருகிறது. உடைந்த குழாய்கள் உள்ள இடங்களில் தோண்டப்பட்ட குழிகள் பல இடங்களில் சரியாக மூடப்படாமலும் உள்ளன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கொடுமுடியில் இருந்து திருப்பூா் மாவட்டத்தில் உள்ள காங்கயம், முத்தூா் நகரங்களுக்கு காவிரி குடிநீரை நிலத்தடி வழியாக கொண்டுச் செல்லும் குழாய்கள் கொடுமுடி புறவழிச் சாலையில் உடைந்து அதிலிருந்து குடிநீா் வெளியேறி வீணாகி வருகிறது.

இது குறித்து துறை அதிகாரிகளிடம் கடந்த நான்கு மாதங்களாக உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்கக் கூறியும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.