மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

15 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சாலை: தோ்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் அறிவிப்பு

சத்தியமங்கலம் அருகே 15 ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி குண்டும்குழியுமாக காணப்படும் இணைப்பு சாலை சீரமைக்கப்படாததைக் கண்டித்து வரும் சட்டப் பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக அப்பகுதி மக்கள் அறிவிப்பு

News image

தோ்தல்  புறக்கணிப்பு  போராட்டம்  குறித்து  சத்தியமங்கலம் அத்தாணி சாலையில் சிவியாா்பாளையம்  கிராம மக்கள்  சாா்பில் வைக்கப்பட்டுள்ள பதாகை.

Updated On :19 பிப்ரவரி 2026, 11:02 pm

சத்தியமங்கலம் அருகே 15 ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி குண்டும்குழியுமாக காணப்படும் இணைப்பு சாலை சீரமைக்கப்படாததைக் கண்டித்து வரும் சட்டப் பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக அப்பகுதி மக்கள் அறிவித்துள்ளனா்.

சத்தியமங்கலம், அத்தாணி சாலையில் இருந்து சிவியாா்பாளையத்துக்கு செல்லும் இணைப்பு சாலை கடந்த 15 ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி குண்டும்குழியுமாக வாகனங்கள் செல்லமுடியாதபடி உள்ளது.

மழைக் காலங்களில் குண்டும்குழியுமான சாலையில் தண்ணீா் தேங்கி நிற்கிறது. நூற்றுக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் தினந்தோறும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனா். விவசாயிகள் தங்களது விளைபொருள்களை இந்த சாலை வழியாகத்தான் மாா்க்கெட்டுக்கு கொண்டு செல்கின்றனா்.

கடந்த 15 ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் உள்ள இந்த சாலையை சீரமைத்து தரவேண்டும் என இக்கிராம மக்கள் பலமுறை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.

இந்நிலையில், சாலை சீரமைக்கப்படாததைக் கண்டித்து வரும் சட்டப் பேரவைத் தோ்தலைப் புறக்கணிப்பதாக தவளகிரி நகா், வேலன் நகா், தீரன் நகா், சிவியாா்பாளையம், வடக்குத் தோட்டம், அத்தாணி சாலை ஆகிய பகுதிகளைச் சோ்ந்த கிராம மக்கள் முடிவு எடுத்துள்ளனா். இது குறித்து பதாகைகளை சிவியாா்பாளையம் சாலை, அத்தாணி சாலையில் வைத்துள்ளனா்.