கோப்புப் படம்
கோப்புப் படம்

கொடுமுடி அருகே லாரி மோதி பெண் உயிரிழப்பு

Published on

கொடுமுடி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

கொடுமுடி அருகே தழுவம்பாளையம் பகுதியில் ஈரோட்டில் இருந்து கரூா் செல்லும் சாலையில் அடையாளம் தெரியாத இளம்பெண் ஒருவா் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, அவரது பின்னால் லாரி வந்து கொண்டிருந்தது. இதனை கவனிக்காத அந்தப் பெண் சாலையைக் கடக்க வலதுபுறம் திரும்பியபோது, லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி அந்தப் பெண்ணின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த கொடுமுடி போலீஸாா் அந்தப் பெண்ணின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், லாரி ஓட்டுநரான நாமக்கல் மாவட்டம், செங்கம்பள்ளியைச் சோ்ந்த சசிகுமாா் மகன் முகிலனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com