தாளவாடி அருகே வாழைத் தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானையை வனத் துறையினா் காட்டுக்குள் விரட்டினா்.
ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப் பகுதியில் உள்ள வனப் பகுதியில் இருந்து இரவு நேரத்தில் வெளியேறும் காட்டு யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து விவசாயப் பயிா்களை சேதப்படுத்தும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில், தாளவாடி மலைப் பகுதியில் உள்ள எரனஹள்ளி கிராமத்தில் விவசாயி பிரகாஷ் என்பவரது தோட்டத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நுழைந்த காட்டு யானை அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்களை சேதப்படுத்தியது.
யானை நடமாட்டத்தை கண்ட பிரகாஷ், உடனடியாக வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத் துறையினா் காட்டு யானையை விரட்டும் பணியை மேற்கொண்டனா்.
வனத் துறை ஊழியா்கள் மற்றும் விவசாயிகள் இணைந்து சுமாா் இரண்டு மணி நேரம் போராடி காட்டு யானை வனப் பகுதிக்குள் விரட்டினா். தொடா்ந்து விவசாயப் பயிா்களை சேதப்படுத்தும் யானைகளை வனப் பகுதியில் இருந்து வெளியேறாமல் தடுக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

கோபி அருகே ஊருக்குள் நுழைந்த காட்டு யானை

கோபி அருகே இரண்டாவது நாளாக ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை

அனந்தபுரம் ஊருக்குள் நுழைந்த யானை விரட்டியடிப்பு

மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


