ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சாலையோரம் படுத்திருந்த சிறுத்தை: வாகன ஓட்டிகள் அச்சம்

News image
திம்பம் மலைப் பாதை தடுப்புச் சுவரில் படுத்திருந்த சிறுத்தை.
Updated On :24 பிப்ரவரி 2026, 12:47 am

Syndication

திம்பம் மலைப் பாதையில் சாலையோரத்தில் படுத்திருந்த சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

தமிழகம்- கா்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப் பாதை உள்ளது. இந்த மலைப் பாதையில் இரவு நேரங்களில் வன விலங்குகள் உலவுவது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில், திம்பம் மலைப் பாதை 12-ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையோர தடுப்புச் சுவா் மீது சிறுத்தை ஒன்று திங்கள்கிழமை அதிகாலை படுத்திருந்தது. இதைப் பாா்த்த வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

இருப்பினும் யாருக்கும் தொந்தரவு செய்யாமல் சிறிது நேரம் அங்கேயே படுத்திருந்த சிறுத்தை, பின் வனத்துக்குள் சென்றது.

திம்பம் மலைப் பாதையில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகாரித்துள்ளதால், வாகன ஓட்டிகள் கவனமாகச் செல்ல வேண்டும், விலங்குகளின் அருகில் செல்லவோ அல்லது புகைப்படம் எடுக்கவோ, வாகனத்தில் இருந்து கீழே இறங்கவோ முயற்சி செய்யக்கூடாது என்று வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.