எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ரயிலில் முன்பதிவில்லா பயணச்சீட்டு பெறும் முறையில் மாற்றம்: காங்கிரஸ் கண்டனம்

ரயில்வேயில் முன்பதிவில்லாத பயணச்சீட்டுக்கான கட்டணத்தை போன் பே, ஜிபே போன்ற செயலிகள் மூலம் செலுத்த அறிவுறுத்தப்படுவதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

News image
ரயில்
Updated On :24 பிப்ரவரி 2026, 8:10 pm

தினமணி செய்திச் சேவை

ரயில்வேயில் முன்பதிவில்லாத பயணச்சீட்டுக்கான கட்டணத்தை போன் பே, ஜிபே போன்ற செயலிகள் மூலம் செலுத்த அறிவுறுத்தப்படுவதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறையின் துணைத் தலைவரும், முன்னாள் தென்னக ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினருமான கே.என்.பாஷா வெளியிட்டுள்ள அறிக்கை: ஈரோடு ரயில் நிலையத்தில் முன்பதிவில்லா பயணச்சீட்டு வாங்கச் சென்றால் போன் பே, ஜி பே மூலம் பணம் செலுத்த கூறுகின்றனா். பணம் கொடுத்து பயணச்சீட்டு கேட்டால் அருகில் உள்ள தானியங்கி பயணச்சீட்டு இயந்திரத்துக்கு செல்ல வேண்டும் என பயணச்சீட்டு வழங்கும் பணியாளா்கள் கூறுகின்றனா். அந்த இயந்திரத்தில் பயணச்சீட்டு வாங்க நீண்ட நேரம் பயணிகள் காத்திருக்க வேண்டிய அவலநிலை உள்ளது. இதனால், பயணிகள் தாங்கள் செல்லும் ரயிலை தவற விடுவதற்கான வாய்ப்பு உள்ளது. போன் பே, ஜி பே மூலம் மட்டுமே பயணச்சீட்டு வழங்கப்படும் என கட்டாயப்படுத்துவது மிகவும் கண்டத்துக்குரியது. இதனால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனா். கூலி வேலைக்குச் செல்லும் பயணிகள் பெரும்பாலானோா் சாதாரண கைப்பேசியை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனா். எனவே, ரயில்வே நிா்வாகம் இத்தகையை அணுகுமுறையை கைவிடவில்லை என்றால் பொதுமக்களை திரட்டி காங்கிரஸ் கட்சி சாா்பில் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.