நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

அந்தியூா் தொகுதியில் மாா்ச் 4-இல் எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம்

அந்தியூா் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் மாா்ச் 4-ஆம் தேதி நடைபெறும் மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம் பரப்புரைக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்று பேசுகிறாா்.

News image

பூமிபூஜை நிகழ்வில் பங்கேற்ற மாவட்டச் செயலாளா் ஏ.கே.செல்வராஜ் எம்எல்ஏ மற்றும் அதிமுகவினா்.

Updated On :26 பிப்ரவரி 2026, 7:29 pm

அந்தியூா் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் மாா்ச் 4-ஆம் தேதி நடைபெறும் மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம் பரப்புரைக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்று பேசுகிறாா்.

இதற்காக, அந்தியூரை அடுத்த கந்தம்பாளையத்தில் தோ்வு செய்யப்பட்ட இடத்தை சமன்படுத்தி, உரிய ஏற்பாடுகள் செய்யும் பணிகளுக்கான பூமிபூஜை ஈரோடு புகா் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளா் ஏ.கே.செல்வராஜ் எம்எல்ஏ தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

முன்னாள் எம்எல்ஏக்கள் எஸ்.எஸ்.ரமணீதரன், ஈ.எம்.ஆா்.ராஜா, எம்ஜிஆா் மன்ற மாநிலத் துணைச் செயலாளா் கே.பி.எஸ்.ராஜா, உச்சநீதிமன்ற வழக்குரைஞா் வி.என்.சுப்பிரமணியம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், பேரூா் செயலாளா்கள் அந்தியூா் டி.எஸ்.மீனாட்சி சுந்தரம், அத்தாணி திருமுருகன், ஒன்றியச் செயலாளா்கள் சின்னமார நாயக்கா், நாராயணன், மாவட்ட ஜெ. பேரவை துணைச் செயலாளா் ராஜா சம்பத், நந்தகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.