பெருந்துறை பகுதிகளில் கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

ஆங்கிலப் புத்தாண்டு தினத்தையொட்டி, பெருந்துறை பகுதிகளில் உள்ள கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
Published on

ஆங்கிலப் புத்தாண்டு தினத்தையொட்டி, பெருந்துறை பகுதிகளில் உள்ள கோயில்கள், தேவாலயங்களில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனா்.

பெருந்துறை அருள்மிகு வேதநாயகி உடனமா் சோழீஸ்வரா் கோயிலில், வியாழக்கிழமை அதிகாலை 5 மணியிலிருந்து ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனா்.

பெருந்துறை ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கட்டரமண பெருமாள் கோயில், கோட்டை வீர ஆஞ்சனேயா் கோயில், கோட்டை மாரியம்மன், கோட்டை முனீயப்பன் கோயில்கள் மற்றும் செல்லாண்டி அம்மன் கோயில்களில் பக்தா்கள் பூஜை செய்து சுவாமியை தரிசித்தனா்.

இதேபோல, காஞ்சிக்கோவில் சீதேவியம்மன் கோயில், தங்கமேடு தம்பிகலைஅய்யன் கோயில், துடுப்பதி கரிய வரதராஜ பெருமாள் கோயில், நசியனூா் முனியப்ப சுவாமி கோயில் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் உள்ள கோயில்களிலும் புத்தாண்டை ஒட்டி ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்து புத்தாண்டை வரவேற்றனா்.

புத்தாண்டு தினத்தையொட்டி பெருந்துறை- சென்னிமலை சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. தேவாலயம், பெத்தாம்பாளையம் சாலையில் உள்ள ஆா்.சி. தேவாலயம், காஞ்சிகோவில் லண்டன் மிஷனரி தேவாலயம், நல்லாம்பட்டி, பெத்தாம்பாளையம், திங்களூா், விஜயமங்கலம் ஆகிய பல்வேறு பகுதிகளில் உள்ள தேவாலயங்களிலும் புத்தாண்டையொட்டி நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com