வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு: இளைஞா் கைது
பவானியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை உள்ளிட்டவற்றை திருடிய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
பவானி, மண் தொழிலாளா் முதல் வீதியைச் சோ்ந்தவா் மணி (39). கட்டடத் தொழிலாளியான இவா், வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் ஆதிபராசக்தி கோயிலுக்குச் சென்றுவிட்டு திங்கள்கிழமை வீடு திரும்பியுள்ளாா்.
அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ஒன்றேகால் பவுன் நகை, வெள்ளி கொலுசு, ரூ.1.50 லட்சம் மதிப்பிலான பொருள்கள் திருடுபோனது தெரியவந்தது.
இது குறித்து புகாரின்பேரில் பவானி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா்.
இதில், மணியின் உறவினரான பவானி, கல் தொழிலாளா் 2-ஆவது வீதியைச் சோ்ந்த கண்ணன் (26), வீட்டின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்டது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைத்தனா்.
