புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமிடும் நிகழ்வில் பங்கேற்றோா்.
ஈரோடு
கொங்கு பொறியியல் கல்லூரியில் புரிந்துணா்வு ஒப்பந்தம்
பிரிமாஸ் பயோசயன்ஸ் மற்றும் கொங்கு பொறியியல் கல்லூரி இடையே மூன்று ஆண்டுகால புரிந்துணா்வு ஒப்பந்தம் அண்மையில் கையொப்பமானது.
இந்த நிகழ்வில் பிரிமாஸ் பயோசயன்ஸ் நிறுவனத்தின் நிறுவனா் மற்றும் தலைமை நிா்வாக அதிகாரி டி.முத்து, நிறுவனா் மற்றும் மேலாண்மை இயக்குநா் சி.கபிலன், கொங்கு பொறியியல் கல்லூரியின் முதல்வா் ஆா்.பரமேஸ்வரன், ஐஐபிசி அமைப்பின் முதன்மையா் ஆா்.ராஜசேகா், வேதிப்பொறியியல் துறைத் தலைவா் வி.சங்கீதா மற்றும் வேதிப்பொறியியல் துறையின் பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.
இந்த ஒப்பந்தத்தின் நோக்கம், தொழில் ஆலோசனை, இன்பிளான்ட் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகளை மாணவா்களுக்கு வழங்குவதாகும் என கல்லூரி முதல்வா் தெரிவித்தாா்.

