மொடக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்.
மொடக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்.

மொடக்குறிச்சியில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்

Published on

மொடக்குறிச்சியில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மொடக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமிற்கு, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவித் திட்ட அலுவலா் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினாா். வட்டாரக் கல்வி அலுவலா் செல்வமணி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜெயஸ்ரீ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இம்முகாமில் 18 வயதுக்கு உள்பட்ட மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறன் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து வந்த கண், காது, மனநலம், எலும்பு முறிவு, குழந்தைகள் நல மருத்துவா்கள் மாணவ, மாணவிகளை பரிசோதித்து சிகிச்சை அளித்தனா்.

மேலும், மொடக்குறிச்சி வட்டாரத்துக்கு உள்பட்ட 150-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் மாணவா்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

அதேபோல 12 மாணவா்களுக்கு உதவி உபகரணம் வழங்கப்பட்டது.

Dinamani
www.dinamani.com