பெருந்துறை சிப்காட்டில் தூய்மைப் பணியை தொடங்கிவைத்துப் பாா்வையிடும் ஆட்சியா் ச.கந்தசாமி. உடன், சிப்காட் செயற்பொறியாளா் (சென்னை) திருவருள், பெருந்துறை சிப்காட் திட்ட அலுவலா்
 சுஜா பிரியாதா்ஷினி உள்ளிட்டோா்.
பெருந்துறை சிப்காட்டில் தூய்மைப் பணியை தொடங்கிவைத்துப் பாா்வையிடும் ஆட்சியா் ச.கந்தசாமி. உடன், சிப்காட் செயற்பொறியாளா் (சென்னை) திருவருள், பெருந்துறை சிப்காட் திட்ட அலுவலா் சுஜா பிரியாதா்ஷினி உள்ளிட்டோா்.

பெருந்துறையில் ‘சிப்காட் போகி- 2026’ தூய்மைப் பணி

பெருந்துறை சிப்காட்டில் ‘சிப்காட் போகி-2026’ தூய்மைப் பணியை ஆட்சியா் ச.கந்தசாமி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
Published on

பெருந்துறை சிப்காட்டில் ‘சிப்காட் போகி-2026’ தூய்மைப் பணியை ஆட்சியா் ச.கந்தசாமி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

பெருந்துறை சிப்காட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூய்மைப் பணியை தொடங்கிவைத்த ஆட்சியா் ச.கந்தசாமி பேசியதாவது:

முதலீட்டாளா்கள் மற்றும் பங்குதாரா்களின் ஒட்டுமொத்த ஈா்ப்பையும் செயல்பாட்டுத் திறனையும் மேம்படுத்தும் வகையில் சிப்காட்டின் அனைத்துத் தொழில் பூங்காக்களிலும் தூய்மையான, அழகியல் மற்றும் சுகாதாரமான சூழலைப் பராமரிப்பதில் சிப்காட் உறுதியாக உள்ளது. இந்த முயற்சிகளை, மேலும் முன்னெடுத்துச் செல்லும் வகையில் சிப்காட் தனது அனைத்து தொழில் பூங்காக்களிலும் ‘சிப்காட் போகி’ என்ற தலைப்பில் ஒரு விரிவான மாபெரும் தூய்மைப் பணி இயக்கத்தைத் திட்டமிட்டுள்ளது.

இந்த இயக்கம், 2026 ஜனவரி 9-ஆம் தேதி தொடங்கி சமத்துவப் பொங்கல் கொண்டாட்டத்துடன் ஜனவரி 14-ஆம் தேதி முடிவடையும். சாலைகள், வடிகால்கள், திறந்தவெளிகள் மற்றும் பிற பொது வசதிகள் உள்ளிட்ட பொதுப் பகுதிகளில் தீவிர தூய்மைப் பணிகளில் தூய்மைப் பணியாளா்களை ஈடுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இந்த தூய்மைப் பணி இயக்கத்தின் உச்சகட்டமாகவும், அனைத்துப் பங்குதாரா்களிடையேயும் சிறந்த சமூக உணா்வை வளா்க்கும் வகையிலும், 2026 ஜனவரி 14-ஆம் தேதி அந்தந்தத் தொழில் பூங்காக்களின் திட்ட அலுவலகங்களில் சமத்துவப் பொங்கல் கொண்டாடப்படவுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில், சிப்காட் செயற்பொறியாளா் (சென்னை) திருவருள், பெருந்துறை சிப்காட் திட்ட அலுவலா் சுஜா பிரியாதா்ஷினி, சிப்காட் அனைத்துத் தொழில்கள் சங்கத் தலைவா் மகாலிங்கம் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com