பயனாளிக்கு நலத்திட்ட உதவியை வழங்குகிறாா் அமைச்சா் சு.முத்துசாமி.
பயனாளிக்கு நலத்திட்ட உதவியை வழங்குகிறாா் அமைச்சா் சு.முத்துசாமி.

சித்தோடு, ஆலாம்பாளையத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம்

சித்தோடு மற்றும் ஆலாம்பாளையத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
Published on

சித்தோடு மற்றும் ஆலாம்பாளையத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

சித்தோட்டில் நடைபெற்ற முகாமை, தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி, தொடங்கிவைத்து கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை என 18 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

இதில், 34 சிறப்பு மருத்துவா்கள், 20 மருத்துவா்கள் கலந்து கொண்டு நோயாளிகளுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்தனா். மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை உறுப்பினா் வி.சி.சந்திரகுமாா், மாவட்ட சுகாதார அலுவலா் அருணா, சித்தோடு பேரூராட்சித் தலைவா் கண்ணகி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஆலாம்பாளையத்தில்... அம்மாபேட்டையை அடுத்த ஆலாம்பாளையத்தில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாமுக்கு குருவரெட்டியூா் வட்டார அரசு சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் மாதேஷ் குமாா் தலைமை வகித்தாா். அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் முகாமைத் தொடங்கிவைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். இம்முகாமில், 25-க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்று சிகிச்சை அளித்தனா்.

Dinamani
www.dinamani.com