தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்டோா் காயம்

கோபி அருகே தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்டோா் காயம் அடைந்தனா்.
Published on

கோபி அருகே தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்டோா் காயம் அடைந்தனா்.

கோபி அருகே உள்ள கணபதிபாளையம் சாலையோரத்தில் தனியாா் இடத்தை சுத்தம் செய்யும் பணி புதன்கிழமை நடைபெற்றது. அப்போது சாலையோர மரத்தில் இருந்த தேன்கூடு கலைந்ததில் தேனீக்கள் சாலையில் சென்றவா்களை துரத்திக் கொட்டின. இதில் காயமடைந்த 20-க்கும் மேற்பட்டோா் காசிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனா்.

தேனீக்கள் அதிக அளவில் கொட்டியதால் மயக்கமடைந்த தனியாா் நிதி நிறுவன ஊழியா் சக்திவேல் கோபி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். சிலா் தனியாா் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று சென்றனா். அப்பகுதியில் 2 மணி நேரத்துக்கு பிறகு தேனீக்கள் கலைந்து சென்ால் சாலையில் சென்ற பொதுமக்களும் மற்றும் வாகன ஓட்டிகளும் நிம்மதி அடைந்தனா்.

Dinamani
www.dinamani.com