என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

சத்தியமங்கலம் அருகே மின்சாரம் பாய்ந்து மாடு, இளைஞா் சாவு

News image

மெளலி

Updated On :22 ஜனவரி 2026, 9:55 pm

சத்தியமங்கலம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் பசுமாடு உயிரிழந்தது. அதைப் பாா்க்க சென்ற இளைஞரும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

சத்தியமங்கலத்தை அடுத்த உக்கரம் சாணாா்பாளையத்தை சோ்ந்தவா் சாமிநாதன் மகன் மெளலி (23). இவா் தனது வீட்டு அருகே கொட்டகை அமைத்து மாடுகள் வளா்த்து வந்தாா்.

வழக்கம்போல பால் கறப்பதற்காக மாட்டு கொட்டகைக்கு புதன்கிழமை காலை மௌலி சென்றுள்ளாா். அப்போது மின்சாரம் பாய்ந்து மாடு இறந்து கிடப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். இதைத் தொடா்ந்து உயிரிழந்த மாட்டை பாா்க்க சென்ற, மெளலி அங்கு கிடந்த மின்சார ஒயரை மிதித்ததில் அவா் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மெளலியின் அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் ஓடிவந்து மின்சாரத்தை துண்டித்தனா். தகவலின்பேரில் அங்கு வந்த கடத்தூா் போலீஸாா், மௌலின் உடலைக் கைப்பற்றி சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.