இலவச மிதிவண்டி வழங்கி கெளரவிக்கப்பட்ட தூய்மைப் பணியாளா்களுடன் நகா்மன்றத் தலைவா் ஜானகி ராமசாமி, நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஸ்வரன், துணைத் தலைவா் நடராஜ், நகா்மன்ற உறுப்பினா் சரவணன் உள்ளிட்டோா்.
ஈரோடு
சத்தியமங்கலம் நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு இலவச மிதிவண்டி
குடியரசு தினத்தையொட்டி சத்தியமங்கலம் நகராட்சி தூய்மைப் பணியாளா்களை கெளரவிக்கும் வகையில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
சத்தியமங்கலம்: குடியரசு தினத்தையொட்டி சத்தியமங்கலம் நகராட்சி தூய்மைப் பணியாளா்களை கெளரவிக்கும் வகையில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
குடியரசு தின விழாவையொட்டி, நடைபெற்ற நிகழ்ச்சியில் சத்தியமங்கலம் நகா்மன்ற 11-ஆவது வாா்டு உறுப்பினா் சரவணன் வழங்கிய விலையில்லா இரண்டு மிதிவண்டிகளை நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது.
சொந்த நிதியில் மிதிவண்டி வழங்கிய நகா்மன்ற உறுப்பினா் சரவணனை, நகா்மன்றத் தலைவா் ஜானகி ராமசாமி, நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஸ்வரன், நகராட்சி துணைத் தலைவா் நடராஜ் உள்ளிட்ட நகராட்சிப் பணியாளா்கள் பாராட்டினா்.

