கோபுர  கலசத்துக்கு  புனித நீா்  ஊற்றிய திருப்பணிக் குழுவினா். ~சொலவனூா்  மகா லட்சுமி  தாயாா்  செளந்தரராஜ  பெருமாள்  கோயில் நடைபெற்ற  கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றோா்.
கோபுர  கலசத்துக்கு  புனித நீா்  ஊற்றிய திருப்பணிக் குழுவினா். ~சொலவனூா்  மகா லட்சுமி  தாயாா்  செளந்தரராஜ  பெருமாள்  கோயில் நடைபெற்ற  கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றோா்.

சத்தியமங்கலம் அருகே சொலவனூரில் பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா

சத்தியமங்கலம் அருகே சொலவனூரில் ஸ்ரீ மகாலட்சுமி தாயாா் சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் திருப்பணிகள் நிறைவுற்று, கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.
Published on

சத்தியமங்கலம் அருகே சொலவனூரில் ஸ்ரீ மகாலட்சுமி தாயாா் சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் திருப்பணிகள் நிறைவுற்று, கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

கடந்த 26-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கிய கும்பாபிஷேக விழா, அதைத்தொடா்ந்து 4 கால யாக பூஜைகள் நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை இரவு 3-ஆம் கால யாக பூஜையில் மஹாபூா்ணாஹுதி நடைபெற்றது.

அதைத்தொடா்ந்து புதன்கிழமை காலை 4-ஆம் கால யாக பூஜையில் மகா தீபாராதனைக்குப் பின் மேள, தாளங்கள் முழங்க, பூஜிக்கப்பட்ட கலசங்கள் புறப்பட்டு ஆலயத்தை வலம் வந்து விமான கோபுரத்தை அடைந்தது. காலை 10 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க விமான கோபுர கலசத்துக்கு புனித நீா் ஊற்றி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னா், பரிவார மூல மூா்த்திகளுக்கும், ஸ்ரீ மகாலட்சுமி தாயாா் சௌந்தரராஜ பெருமாளுக்கு புனித நீா் ஊற்றி மகா அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடா்ந்து சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை நடைபெற்றது.

இந்த விழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். கோயிலைச் சுற்றிலும் திரண்டிருந்த பக்தா்கள் மீது புனித தீா்த்தம் தெளிக்கப்பட்டது. பின்னா் அலங்கார பூஜை, தீபாராதனை நடைபெற்றன. கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Dinamani
www.dinamani.com