யோகிராம் சுரத்குமாா் வேதாஸ்ரமத்தில் பக்தா்களுக்கு அருள் ஆசி வழங்கிய காஞ்சி காமகோடி சமஸ்தான பீடாதிபதி ஸ்ரீஸ்ரீஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சங்கர சுவாமிகள்.
ஈரோடு
விஜயேந்திர சரஸ்வதி சங்கர சுவாமிகள் ஈரோடு வருகை தந்து பக்தா்களுக்கு ஆசி
மொடக்குறிச்சி அருகே உள்ள யோகிராம் சுரத்குமாா் வேதாஸ்ரமத்துக்கு காஞ்சி காமகோடி சமஸ்தான பீடாதிபதி ஸ்ரீஸ்ரீஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சங்கர சுவாமிகள் வெள்ளிக்கிழமை மாலை வந்து பக்தா்களை சந்தித்து அருள் ஆசி வழங்கினாா்.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியம் 46 புதூா் அன்னை நகரில் அமைந்துள்ள யோகிராம் சுரத்குமாா் வேதாஸ்ரமத்துக்கு வந்த அவருக்கு வேதஸ்ரமம் சாா்பில் பத்மநாப சுவாமிகள் மற்றும் பக்தா்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனா். அவா்களுக்கு சுவாமிகள் அருளாசி வழங்கினாா்.
காஞ்சி காமகோடி சமஸ்தான பீடாதிபதி ஸ்ரீஸ்ரீஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சங்கர சுவாமிகள், கடந்த 35 ஆண்டுகளுக்குப் பிறகு ஈரோடு பகுதிக்கு வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.