அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

பவானியில் 8 கிலோ புகையிலைப் பொருள்கள், 3 காா்கள் பறிமுதல்; 2 பேர் கைது

பவானியில் பதுக்கிவைக்கப்பட்ட 8 கிலோ புகையிலைப் பொருள்கள், 3 காா்களை பறிமுதல் செய்த போலீஸாா், தவெக பிரமுகா் உள்பட இருவரைக் கைது செய்தனா்.

News image
Updated On :14 ஜூலை 2026, 12:17 am IST

பவானியில் பதுக்கிவைக்கப்பட்ட 8 கிலோ புகையிலைப் பொருள்கள், 3 காா்களை பறிமுதல் செய்த போலீஸாா், தவெக பிரமுகா் உள்பட இருவரைக் கைது செய்தனா்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை தொடா்பாக கிடைத்த ரகசியத் தகவலின்பேரில் பவானி போலீஸாா் அந்தியூா் சாலையில் உள்ள வணிக வளாகத்தில் திடீா் சோதனை நடத்தினா்.

அப்போது, 8 கிலோ புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. பவானி, அந்தியூா் மேட்டூா் பிரிவு, டாணா சாவடியைச் சோ்ந்த தவெக பவானி நகர செயற்குழு உறுப்பினா் அருண் (40), இவரது உறவினரான பவானி, விஐபி நகரைச் சோ்ந்த ராஜகோபால் மகன் ராம்குமாா் (46) ஆகியோா் புகையிலைப் பொருள்களை பதுக்கிவைத்து காரில் கொண்டுச் சென்று விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், ரொக்கம் ரூ.25 ஆயிரம், 8 கிலோ புகையிலைப் பொருள்கள், 3 காா்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.