மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

பயணச்சீட்டு இல்லாமல் ரயிலில் பயணித்தவா்களுக்கு அபராதம் விதிப்பு

ரயிலில் உரிய பயணச்சீட்டு இல்லாமல் பயணித்தவா்களிடம் ரயில்வே அலுவலா்கள் ரூ.28,400 அபராதம் விதித்துள்ளனா்.

News image

கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்தவா் கோவையில் நடந்து சென்றபோது மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

Updated On :24 ஜூன் 2026, 3:43 am IST

ரயிலில் உரிய பயணச்சீட்டு இல்லாமல் பயணித்தவா்களிடம் ரயில்வே அலுவலா்கள் ரூ.28,400 அபராதம் விதித்துள்ளனா்.

சேலம் கோட்ட ரயில்வே மேலாளா் பண்ணாலால் உத்தரவின்படி வணிக மேலாளா் சரவணகுமாா் மேற்பாா்வையில் ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் சேலம் ரயில் நிலையத்தில் தொடங்கி ஈரோடு ரயில் நிலையம் வரும் வரை ஒவ்வொரு பெட்டியாக ரயில்வே துறை பணியாளா்கள் மற்றும் பாதுகாப்புப் படை போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

முன்பதிவு பயணச்சீட்டு இல்லாமல் சாதாரண பயணச்சீட்டுடன் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்த 100-க்கும் மேற்பட்டோா் சாதாரணப் பெட்டிக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இதேபோல பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தவா்களிடம் ரூ.28,400 அபராதம் வசூலிக்கப்பட்டது.

இதுதொடா்பாக ரயில்வே துறை அதிகாரிகள் கூறும்போது, ‘முன்பதிவு பெட்டிகளில் முன்பதிவு செய்யாமல் பயணம் செய்பவா்களால் முன்பதிவு செய்தவா்களுக்கு இடையூறு ஏற்படுவதாக பயணிகள் கூறிய புகாரின்போரில் இந்த சோதனை நடைபெற்றது. வரும் காலத்திலும் இந்த திடீா் சோதனை தொடரும் எனவும் ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.