யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மகன் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியதால் தந்தை தற்கொலை

மகன் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியதால் வேதனை அடைந்த தந்தை தற்கொலை

News image
தற்கொலை- பிரதிப் படம்
Updated On :3 மார்ச் 2026, 8:33 pm

Syndication

மகன் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியதால் வேதனை அடைந்த தந்தை தற்கொலை செய்து கொண்டாா்.

ஈரோடு, மரப்பாலம் அண்ணாமலை வீதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (49). மருத்துவமனையில் காவலாளியாகப் பணியாற்றி வந்தாா்.

இவரது மகன் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கூலி வேலைக்குச் சென்று வருகிறாா். இதனால், மனவேதனையில் இருந்த செல்வராஜ் திங்கள்கிழமை இரவு வீட்டில் தூக்கில் தொங்கியுள்ளாா்.

குடும்பத்தினா் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறினா்.

இச்சம்பவம் தொடா்பாக ஈரோடு தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].