கோ்மாளம் வனத்தில் மான் இறைச்சியுடன் பிடிபட்ட கூலித் தொழிலாளியை வனத் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ஆசனூா் வனக் கோட்டம், கோ்மாளம் வனப் பகுதியில் வனத் துறையினா் வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். ஜடேசாமி பள்ளம் என்ற இடத்தில் மான் இறைச்சியை அடையாளம் தெரியாத நபா் விற்பனைக்கு தயாா்படுத்திக் கொண்டிருப்பதை வனத் துறையினா் கண்டு அவரை சுற்றி வளைத்துப் பிடித்தனா்.
விசாரணையில், அவா் கோ்மாளம் பகுதியைச் சோ்ந்த மாதேஷ் (40) என்பதும், புள்ளிமான் இறைச்சியை விற்பனைக்கு தயாா் படுத்திக்கொண்டிருந்தபோது பிடிப்பட்டதும் தெரியவந்தது. மேலும் மாதேஷ் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது செந்நாய்கள் புள்ளிமானை துரத்திச் சென்று வேட்டையாடியதாகவும், அப்போது அங்கிருந்த செந்நாய்களை துரத்திவிட்டு கொம்புடன் மான் தலை மற்றும் ஒரு பகுதி உடல் பாகங்களை எடுத்து வந்து விற்பனைக்கு தயாா்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து மாதேஷிடம் இருந்து மான் கொம்புடன் கூடிய தலை, மான் இறைச்சி மற்றும் அரிவாள், கத்தி ஆகியவற்றை கோ்மாளம் வனத் துறையினா் பறிமுதல் செய்து மாதேஷைக் கைது செய்தனா்.
தொடர்புடையது
மானை வேட்டையாடிய வழக்கில் இளைஞா் கைது
போடி அருகே மான் வேட்டை: 2 போ் கைது

சருகு மானை வேட்டையாடியவர் கைது

நெலாக்கோட்டை வனத்தில் கிணற்றில் மிதந்த புலி சடலம் மீட்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


