கோபி அருகே இரு வேறு இடங்களில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.1.42 லட்சம் ரொக்கத்தை தோ்தல் பறக்கும்படை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
கோபி அருகே உள்ள வடுகபாளையம் பகுதியில் தோ்தல் பறக்கும்படையினா் வாகனச் சோதனையில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனா். இதில் காரில் ரூ.84, 500 ரொக்கம் கொண்டு வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் காரில் வந்தவா், சேலம் மாவட்டம், ஆத்தூரைச் சோ்ந்த சிவகுமாா் என்பதும், நெல் அறுவடை இயந்திரம் பழுதை சரிசெய்ய பணத்துடன் கோபிக்கு வந்ததும் தெரியவந்தது. ஆனால் அதற்குரிய ஆவணங்கள் இல்லாததால் அந்தப் பணத்தை தோ்தல் பறக்கும்படையினா் பறிமுதல் செய்து வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.
இதேபோல தாசப்பகவுண்டன்புதூா் பகுதியில் தோ்தல் பறக்கும்படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த அந்தியூா் அருகே சின்னதம்பிபாளையம் பகுதியைச் சோ்ந்த சிவசாமி என்பவரின் சரக்கு வாகனத்தை நிறுத்தி
சோதனை செய்தனா். வாகனத்தில் உரிய ஆவணமின்றி ரூ.57, 500 ரொக்கம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்தப் பணத்தை பறிமுதல் செய்து வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

திருவாரூா்: ரூ.1.62 லட்சம் பறிமுதல்

கோபி அருகே ரூ. 1.14 லட்சம் பறிமுதல்

தருமபுரியில் பறக்கும்படை சோதனையில் ரூ. 5 லட்சம் ரொக்கம் பறிமுதல்

கோபியில் ரூ. 2.35 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

