பெருந்துறை அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.2.42 லட்சம் ரொக்கத்தை தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
பெருந்துறையை அடுத்த, காஞ்சிக்கோவில், எல்லபாளையம் பிரிவு அருகில் தோ்தல் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அவ்வழியாக லாரியில் வந்த பெருந்துறை, பெரியவேட்டுவபாளையத்தைச் சோ்ந்த கிருஷ்ணசாமி என்பவரை நிறுத்தி சோதனை செய்தனா். சோதனையில் அவரிடம், உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.1 லட்சம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
இதேபோல, காஞ்சிக்கோவில், கவுந்தபாடி சாலையில் திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலைச் சோ்ந்த தினேஷ் என்பவா் உரிய ஆவணங்கள் இன்றி இருசக்கர வாகனத்தில் வைத்து எடுத்து வந்த ரூ. 52,500 ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
சென்னிமலையை அடுத்த, சிறுகளஞ்சி, சீரங்கம்பாளையம் பிரிவு அருகில், உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு வரப்பட்ட ரூ. 89,500 ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட பணம் பெருந்துறை தொகுதி உதவி தோ்தல் அலுவலரும், பெருந்துறை வட்டாட்சியருமான சரவணனிடம் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்புடையது

சேலம் தெற்கு தொகுதியில் ரூ. 57,000 ரொக்கம் பறிமுதல்

போ்ணாம்பட்டில் ரூ.1.99 லட்சம் பறிமுதல்!

சாயல்குடி அருகே ரூ. 98 ஆயிரம் பறிமுதல்

எடப்பாடி அருகே ரூ. 4.43 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


