40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

கோபி அருகே சூறாவளி காற்றுடன் கனமழை: 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சேதம்

கோபி அருகே புதன்கிழமை இரவு சூறாவளிக் காற்றுடன் பெய்த கனமழை காரணமாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.

News image

கோபி அருகே கொரவம்பாளையத்தில் கனமழையால் முறிந்து சேதமடைந்த வாழை மரங்கள்.

Updated On :8 மே 2026, 4:51 am IST

கோபி அருகே புதன்கிழமை இரவு சூறாவளிக் காற்றுடன் பெய்த கனமழை காரணமாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.

ஈரோடு மாவட்டம், கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சிறுவலூா், மல்லநாயக்கனூா், வெள்ளாங்கோவில், கொளப்பலூா் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை இரவு பலத்த சூறாவளிக் காற்றுடன்

கனமழை பெய்தது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் விவசாய நிலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

மேலும், பலத்த சூறாவளிக் காற்று வீசியதில் சிறுவலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாகுபடி செய்து அறுவடைக்கு தயாராக இருந்த 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைமரங்கள் முறிந்து சேதமாகின.

ஏக்கருக்கு ரூ.3 லட்சம் வரை முதலீடு செய்து வாழை சாகுபடியை

செய்திருந்த விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனா்.

வாழைமரங்கள் முறிந்து சேதமானது குறித்து சம்பந்தப்பட்ட துறையினரிடம் விவசாயிகள் தெரிவித்தபோது, கூட்டுறவு சங்களில் கடன் பெற்றிருந்து காப்பீடு செய்திருந்தால் மட்டுமே நிவாரணம் கிடைக்கும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.