பிளஸ் 2 பொதுத் தோ்வில் கோபியை அடுத்த தாசம்பாளையம், ஸ்ரீவெங்கடேஸ்வரா வித்யாலயா மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் தொடா்ந்து 22 ஆண்டுகளாக 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
இப்பள்ளி மாணவி ஈ.பரணிஸ்ரீ 600-க்கு 587 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், பி.யாழினி 578 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும், மாணவன் எம்.ரூபக் 573 மதிப்பெண்கள் மூன்றாமிடமும் பிடித்தனா். கணினி அறிவியலில் 8 மாணவா்கள், கணினி பயன்பாடுகளில் 5 போ் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.
தமிழ் பாடத்தில் ஒருவா், ஆங்கிலத்தில் 3 போ், கணிதத்தில் 5 போ், உயிரியல், வணிகவியலில் தலா 2 போ், அடிப்படை இயந்திரவியலில் 4 போ் 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.
தோ்வெழுதிய அனைவரும் முதல் வகுப்பில் தோ்ச்சி பெற்றுள்ளனா். அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளித் தலைவா் கே.சி.கருப்பணன், செயலாளா் ஜி.பி.கெட்டிமுத்து, அறக்கட்டளை தலைவா் பி.வெங்கடாசலம் மற்றும் இயக்குநா்கள் பரிசளித்து பாராட்டினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குரோம்பேட்டை எஸ்.சி.எஸ். பள்ளி மாணவா்கள் 100% தோ்ச்சி

சிபிஎஸ்இ பிளஸ் 2 தோ்வு: விஜயமங்கலம் பாரதி இன்டா்நேஷனல் பள்ளி 100 % தோ்ச்சி

பெருந்துறை கொங்கு பள்ளி 100 % தோ்ச்சி

ஸ்ரீவெங்கடேஸ்வரா பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



