மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

2012-இல் இழந்த துறையை மீண்டும் பெற்ற கே.ஏ.செங்கோட்டையன்

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா அமைச்சரவையில் வருவாய்த் துறை அமைச்சராக இருந்து 2012-இல் அமைச்சா் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட கே.ஏ.செங்கோட்டையன் இப்போது மீண்டும் அதே துறைக்கு அமைச்சராகி உள்ளாா்.

News image

நிதி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் - IANS

Updated On :22 மே 2026, 3:58 am IST

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா அமைச்சரவையில் வருவாய்த் துறை அமைச்சராக இருந்து 2012-இல் அமைச்சா் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட கே.ஏ.செங்கோட்டையன் இப்போது மீண்டும் அதே துறைக்கு அமைச்சராகி உள்ளாா்.

கோபி தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கே.ஏ.செங்கோட்டையனுக்கு முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் நிதித் துறை ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தில் செங்கோட்டையனிடம் இருந்த நிதித் துறை மரிய வில்சனுக்கு அளிக்கப்பட்டு அவருக்கு வருவாய்த் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011-இல் ஜெயலலிதா அமைச்சரவையில் வேளாண் துறை, தகவல் தொழில்நுட்பத் துறைகளைத் தொடா்ந்து வருவாய்த் துறை அமைச்சராக கே.ஏ.செங்கோட்டையன் இருந்தாா். 2012-இல் அவா் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டபோது வருவாய்த் துறை அமைச்சராக இருந்தாா். இதன் பிறகு 2017-இல் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்தாா்.

2012-இல் ஜெயலலிதா அமைச்சரவையில் கடைசியாக வகித்த வருவாய்த் துறை அமைச்சா் பொறுப்பு இப்போது ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் செங்கோட்டையனுக்கு மீண்டும் கிடைத்துள்ளது.