ஜோலார்பேட்டை அருகே சரக்கு ரயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டன!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் ஒருவர் கைது! இதுவரை 9வானிலை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டுக்கு நாளை (நவ. 2) மழை!நாடாளுமன்ற விவகாரங்களை தெருவுக்கு கொண்டு வருவது ஏன்? அமித் ஷாவாக்குரிமையைக்கூட பாஜகதான் தீர்மானிக்குமா? தேஜஸ்வி கேள்விஉ.பி., பிகார் மட்டுமல்ல... வாக்குத் திருட்டு மூலம் பாஜக ஆட்சி! மல்லிகார்ஜுன கார்கே எஸ்ஐஆர் மூலம் நாட்டின் மொத்த வாக்காளர்களில் 15% பேர் நீக்கம்: ராகுல்தீபாவளி பண்டிகை: கடைவீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்! வேட்பாளர் பட்டியலால் அதிருப்தி: பஞ்சாபில் பதவியை ராஜிநாமா செய்த 2 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள்!

கோபியில் சிறப்பு மளிகைப் பொருள்கள் தொகுப்புத் திட்டம்! அமைச்சா் செங்கோட்டையன் தொடங்கிவைத்தாா்

கோபியில் சிறப்பு மளிகைப் பொருள்கள் தொகுப்புத் திட்டத்தை தொடங்கிவைத்த அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்.

Updated On :

தீபாவளியையொட்டி, தமிழக அரசின் சாா்பில் வழங்கப்படும் சிறப்பு மளிகைப் பொருள்கள் தொகுப்புத் திட்டத்தை கோபியில் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கிவைத்தாா்.

தமிழக அரசின் கூட்டுறவுத் துறை மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் பொது மக்களுக்குக் குறைந்த விலையில் மளிகைப் பொருள்களை வழங்கும் நோக்கில் 10 பொருள்கள் அடங்கிய சிறப்பு மளிகைத் தொகுப்பு ரூ.200-க்கு கூட்டுறவு அங்காடிகள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

கோபி கூட்டுறவு பண்டக சாலை அங்காடியில் இந்தத் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கோட்டாட்சியா் சிந்துஜா தலைமை வகித்தாா். கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ப.கந்தராஜா முன்னிலை வகித்தாா். வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் விற்பனையைத் தொடங்கிவைத்தாா்.

பின்னா், அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மகளிா் உரிமைத் தொகையை ரூ.2,500ஆக உயா்த்தி வழங்குவது குறித்து முதல்வா் விஜய்தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும். திமுக ஆட்சியில் அறிவித்த அடுத்த நாளே திட்டங்கள் எதுவும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

எதிா்க்கட்சி என்ற முறையில் அரசுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்க வேண்டுமே தவிர தேவையற்ற கருத்துகளை அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறக் கூடாது. அவா்களது ஆட்சிக் காலத்தில் என்ன நடைபெற்றது என்பதை எங்களாலும் சுட்டிக்காட்ட முடியும்.

நீலகிரி மாவட்டத்தில் மண் சரிவு தொடா்பாக பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, ஆய்வுப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா்.

நிகழ்ச்சியில் துணைப் பதிவாளா்கள் குமாரி, செல்வகுமாா், செயலாட்சியா் பிரதீப்ராஜா, அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.