ஜோலார்பேட்டை அருகே சரக்கு ரயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டன!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் ஒருவர் கைது! இதுவரை 9வானிலை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டுக்கு நாளை (நவ. 2) மழை!நாடாளுமன்ற விவகாரங்களை தெருவுக்கு கொண்டு வருவது ஏன்? அமித் ஷாவாக்குரிமையைக்கூட பாஜகதான் தீர்மானிக்குமா? தேஜஸ்வி கேள்விஉ.பி., பிகார் மட்டுமல்ல... வாக்குத் திருட்டு மூலம் பாஜக ஆட்சி! மல்லிகார்ஜுன கார்கே எஸ்ஐஆர் மூலம் நாட்டின் மொத்த வாக்காளர்களில் 15% பேர் நீக்கம்: ராகுல்தீபாவளி பண்டிகை: கடைவீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்! வேட்பாளர் பட்டியலால் அதிருப்தி: பஞ்சாபில் பதவியை ராஜிநாமா செய்த 2 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள்!

பண்ணாரி அம்மன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் அரசு, தனியாா் பள்ளி மாணவா்களுக்கு திறன் போட்டி

போட்டியில்  சாம்பியன்  பட்டம்  வென்ற  திண்டல்  பிவிபி பள்ளி  மாணவா்களுடன்  பள்ளி  செயலாளா்  எஸ்.முருகக்கனி.

Updated On :

பண்ணாரி அம்மன் வித்யா நிகேதன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு ஸ்பெட்டிரம் ஸ்பெஷ்ட் 2026 என்ற மாணவா்கள் திறன் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

பள்ளி செயலாளா் எஸ்.முருகக்கனி தலைமை வகித்தாா். முதல்வா் பி.சியாமளா தேவி முன்னிலை வகித்தாா். பள்ளி மாணவ மாணவிகளுக்கான பாட்டு, பேச்சு, ஓவியம், பரதம், நடனம், களிமண் கலை, சுவரொட்டி தயாரித்தல், அடுப்பில்லா சமையல், மாணவா்களின் கண்டுபிடிப்புகள் உள்பட 15 திறன் போட்டிகள் நடைபெற்றன.

இதில் ஈரோடு, கோவை, திருப்பூா் மற்றும் நீலகிரி மாவட்டங்களைச் சோ்ந்த 24 அரசு மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 1,200 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். ஈரோடு திண்டல் பிவிபி மெட்ரிக். பள்ளி சாம்பியன் பட்டத்தை வென்றது.

போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு 3 பரிசுகள் வீதம் 151 பரிசுகளை எழுத்தாளா் கோவை சதாசிவம், முன்னாள் பள்ளி மாணவரும் பெங்களூரு வெல்ஸ் பாா்கோ நிறுவன துணைத் தலைவருமான ப.விக்னேஷ் ஆகியோா் வழங்கினாா்.

தொடா்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.