இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழப்பு
உயிரிழப்பு - கோப்புப் படம்
கோபி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்த பெண் உயிரிழந்தாா்.
கோபியை அடுத்த குன்னத்தூா் நெட்டிச்சிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ராமசாமி மகன் ஆனந்த் (26). இவா் தனது தாயாா் மீனா (48). இவா்கள் இருவரும் சினிமா பாா்ப்பதற்காக கோபிக்கு இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தனா்.
கொளப்பலூா் அருகே உள்ள காமராஜா் நகா் பகுதியில் வந்தபோது, இருசக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்திருந்த மீனா நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளாா்.
இதில் அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து அவா் கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து சிறுவலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

