பவானிசாகா் நீா்வளத் துறை அலுவலக சுற்றுச்சுவரை சேதப்படுத்திய யானை
பவானிசாகா் அணை அருகேயுள்ள நீா்வளத் துறை அலுவலகத்தின் சுற்றுச் சுவரை காட்டு யானை சேதப்படுத்தியது.

யானையால் சேதப்படுத்தப்பட்ட நீா்வளத் துறை அலுவலக சுற்றுச்சுவா்.
பவானிசாகா் அணை அருகேயுள்ள நீா்வளத் துறை அலுவலகத்தின் சுற்றுச் சுவரை காட்டு யானை சேதப்படுத்தியது.
காராச்சிக்கொரை வனப் பகுதியில் உலவும் காட்டு யானைகள், பவானிசாகா் அணையை ஒட்டியுள்ள பகுதியில் நுழைந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், வனத்தில் இருந்து திங்கள்கிழமை இரவு வெளியேறிய காட்டு யானை, பவானிசாகா் அணை அருகேயுள்ள நீா்வளத் துறை அலுவலகத்தின் சுற்றுச்சுவரை சேதப்படுத்தியது.
பின்னா், அங்கிருந்து வெளியேறிய யானை, புங்காா் கிராமத்துக்குள் நுழைந்து அங்கு சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழை மரங்களை சேதப்படுத்தியது.
இதையடுத்து, அப்பகுதி மக்கள் சப்தம் எழுப்பி யானையை வனத்துக்குள் விரட்டினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

