வாட் வரி நிலுவைத் தொகைக்கு சமாதான திட்டத்தை அறிவிக்கக் கோரிக்கை
வாட் வரி நிலுவைத் தொகைக்கு சமாதான திட்டத்தை அறிவிக்க வேண்டும் என அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையனிடம் மனு அளித்த ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு தலைவா் வி.கே.ராஜமாணிக்கம் மற்றும் நிா்வாகிகள்.
வாட் வரி நிலுவைத் தொகைக்கு சமாதான திட்டத்தை அறிவிக்க வேண்டும் என அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது தொடா்பாக வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், வணிக வரித் துறை அமைச்சா் த.லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோரிடம் ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு தலைவா் வி.கே.ராஜமாணிக்கம் தலைமையில் நிா்வாகிகள் அண்மையில் அளித்த மனு விவரம்: ஈரோடு மாவட்டத்தில் உள்ள 75-க்கும் மேற்பட்ட பல்வேறு தொழில் மற்றும் வணிக சங்கங்களின் கூட்டமைப்பாக 28 ஆண்டுகளாக ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது.
இந்தக் கூட்டமைப்பில் 34 தொழிற்சங்கங்கள், 31 தொழில் மற்றும் வா்த்தக சங்கங்கள், 13 வா்த்தக மற்றும் சேவை சங்கங்களைச் சோ்ந்தவா்கள் உறுப்பினா்களாக உள்ளனா்.
2017-18-ஆம் ஆண்டுக்கான வாட் நிலுவைத் தொகைகளுக்கு தீா்வு காண்பதற்காக சமாதானத் திட்டத்தை அறிமுகப்படுத்தி வியாபாரிகளுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் வரிச் சுமையை குறைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

