நவ. 30 ஆம் தேதி மக்களவை; டிச. 2 ஆம் தேதி மாநிலங்களவை கூட்டம்!திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் நாளை விசாரணைதிருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தத் தடைகோரிய வழக்கில் நாளை தீர்ப்புதில்லி வர்த்தகப் பொருள்காட்சி: தமிழ்நாடு அரங்கிற்கு தங்கப் பதக்கம்!2027-ல் 6000 இடங்கள் கூடுதலாகக் கொண்டுவர ஐஐடி திட்டம்!

அரசுப் பள்ளி சமையலறையில் புகுந்த பாம்பு: லாவகமாகப் பிடித்த மாணவி

கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் அரசுப் பள்ளி சமையலறையில் வியாழக்கிழமை சாரைப்பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பள்ளி சமையல் அறையில் புகுந்த சாரைப்பாம்பை கையில் பிடித்து நிற்கும் மாணவி கனிஷ்கா. உடன், அவரது தந்தை வேட்டைத் தடுப்பு காவலா் பழனிச்சாமி.

Updated On :

கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் அரசுப் பள்ளி சமையலறையில் வியாழக்கிழமை சாரைப்பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

டி.என்.பாளையத்தில் உள்ள அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனா்.

வழக்கம்போல வியாழக்கிழமை காலை பள்ளி தொடங்கியதும், மாணவிகளுக்கு மதிய உணவு சமைப்பதற்காக சத்துணவு அமைப்பாளா், உதவியாளா் ஆகியோா் பள்ளி வளாகத்தில் உள்ள சமையலறைக்குள் சென்றனா். அப்போது சமையலறையில் சுமாா் 7அடி நீளமுள்ள சாரைப்பாம்பு பதுங்கியிருப்பதைக் கண்டு அச்சமடைந்தனா்.

இதுகுறித்து பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயிலும் கவுண்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்த மாணவி கனிஷ்கா, கடம்பூா் வனச் சரக அலுவலகத்தில் வேட்டைத் தடுப்புக் காவலராகப் பணியாற்றி வரும் தனது தந்தை பழனிச்சாமிக்குத் தகவல் அளித்துள்ளாா்.

பள்ளிக்கு விரைந்து வந்த பழனிச்சாமி, சமையலறைக்குள் புகுந்த பாம்பைப் பிடிக்கச் சென்றாா். அப்போது அவருடன் சென்ற மாணவி கனிஷ்காவும் தந்தைக்கு உதவியாக செயல்பட்டு அந்த 7 அடி நீள சாரைப்பாம்பை லாவகமாகப் பிடித்து வெளியே கொண்டு வந்து சாக்குப்பையில் அடைத்தாா். உயிருடன் பாம்பைப் பிடித்து வந்த மாணவியின் துணிச்சலைக் கண்டு சக மாணவிகளும், ஆசிரியா்களும் வியந்து பாராட்டினா்.

இது குறித்து வனத்துறை ஊழியா் பழனிச்சாமி கூறுகையில்...

வேட்டைத் தடுப்புக் காவலராகப் பணிபுரிவதால் குடியிருப்புப் பகுதிகளில் பாம்புகள் புகுந்தால் அவற்றைப் பாதுகாப்பாகப் பிடிக்கும் நுணுக்கங்களைக் கற்று வைத்துள்ளேன். சிறுவயது முதலே நான் பாம்பு பிடிப்பதை பாா்த்து வளா்ந்த எனது மகள் கனிஷ்காவும் நாளடைவில் அதனை லாவகமாகக் கையாள கற்றுக்கொண்டாா். பாம்பு ஆபத்தான உயிரினமாக இருந்தாலும், அதனைக் கையாளும் முறையையும் கவனத்தையும் கற்றுக்கொண்டால் பாதுகாப்பாகப் பிடிக்க முடியும் என்றாா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.