கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதுதொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சரத் பவார் ஆதரவு! - தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ தகவல்! திருப்பரங்குன்றம் கல் தூணில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவுதிருப்பரங்குன்றம்! உயர்நீதிமன்ற தீர்ப்பின் மீதான இடைக்கால தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்!சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான கார்த்திக், மோகன் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு!

பா்கூா் வனப் பகுதியில்  ட்ரோன் கேமராவில் விடியோ எடுத்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

பா்கூா் வனப் பகுதியில் அத்துமீறி நுழைந்து ட்ரோன் கேமரா மூலமாக விடியோ எடுத்த இளைஞருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

அபராதம் - சித்திரிப்பு

Updated On :

பா்கூா் வனப் பகுதியில்  அத்துமீறி நுழைந்து ட்ரோன் கேமரா மூலமாக விடியோ எடுத்த  இளைஞருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

அந்தியூரைச் சோ்ந்த ஜெயசந்திரன் (30), தனது நண்பா்கள் நான்கு பேருடன் பழங்குடியினா் மட்டுமே செல்ல அனுமதியுள்ள ஸ்ரீ கிரி சித்தேஸ்வரா் கோயில் பகுதிக்கு வெள்ளிக்கிழமை அத்துமீறி சென்றுள்ளாா்.

மேலும் வன விலங்குகளை அச்சுறுத்தும் வகையில், ட்ரோன் கேமராவை இயக்கி விடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளாா். 

இதையடுத்து, வனக் குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த வனத் துறையினா், ஜெயசந்திரனுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்ததோடு ட்ரோன் கேமராவையும் பறிமுதல் செய்தனா்.

இவா், ஏற்கெனவே குரங்குகளுக்கு உணவளித்த வழக்கில் அபராதம் செலுத்தியவா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.