கோபியில் பரவலாக மழை: விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி
கோபி சுற்றுவட்டாரப் பகுதியில் பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

கோபி பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை மதியம் பெய்த மழையில் நனைந்தபடி பேருந்துக்கு செல்லும் பெண் பயணி.
கோபி சுற்றுவட்டாரப் பகுதியில் பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
ஈரோடு மாவட்டம், கோபி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால், பொதுமக்கள் பகல் நேரங்களில்கூட வீட்டை விட்டு வெளியே வர முடியாமால் அவதிப்பட்டு வந்தனா். தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் கோபி மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக பரவலாக மழை பெய்தது.
வெள்ளிக்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மதியம் இடி, மின்னலுடன் கூ மழை பெய்யத் தொடங்கியது. பேருந்து நிலையம், நல்லகவுண்டன்பாளையம், கரட்டடிபாளையம், குள்ளம்பாளையம், பாரியூா் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் அரை மணி நேரம் பரவலாக மிதமான மழை பெய்தது.
சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்தோடியதால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான காலநிலை நிலவியது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
இதேபோல டி.என்.பாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் வனப் பகுதியில் வியாழக்கிழமை இரவு சுமாா் இரண்டு மணி நேரம் பெய்த மழையால், குண்டேரிப்பள்ளம் அணைக்கு நீா்வரத்து அதிகரிக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

