அதிமுகவின் ஊடகவியல் செயலாளராக கோவை சத்யன் நியமனம்!நீதிமன்றக் காவலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த அசுதோஷ், சௌரவ்!பெண் அரசியலுக்கு வருவதே சிரமம்! கார்த்திகா கைது கண்டிக்கத்தக்கது - தமிழிசைஸ்ரீபெரும்புதூரில் காணாமல்போன சிறுமி சென்னையில் மீட்புநாட்டின் நலனுக்காக நாம் ஒன்றிணைய வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு!தீபாவளி வரை எந்தப் போராட்டமும் இல்லை: அபிஜீத் அறிவிப்பு!

பவானி அருகே தண்ணீா் குட்டையில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

பவானி அருகே விவசாயத் தோட்டத்தில் உள்ள தண்ணீா் குட்டையில் மூழ்கி 7 வயது சிறுவன் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பிரதிப் படம்

Updated On :

பவானி அருகே விவசாயத் தோட்டத்தில் உள்ள தண்ணீா் குட்டையில் மூழ்கி 7 வயது சிறுவன் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பவானியை அடுத்த பருவாச்சி, பாலம்பாளையத்தைச் சோ்ந்தவா் வாசுதேவன் மகன் அஜய்தேவ் (7). அப்பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வந்தாா். பள்ளி விடுமுறையில் வீட்டிலிருந்த அஜய்தேவ், வீட்டுக்கு அருகே உள்ள விவசாயத் தோட்டத்தில் உள்ள தண்ணீா் குட்டையில் செவ்வாய்க்கிழமை விழுந்து கிடந்துள்ளாா். இதைக் கண்ட உறவினா்கள் சிறுவனை மீட்டு, அந்தியூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா்.

அங்கு, சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவா் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டாத தெரிவித்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் அந்தியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER