குழியாடா பழங்குடியி மக்களுக்கு ரூ.7.50 லட்சம் கால்நடை வளா்ப்பு நிதியுதவி
ரீடு நிறுவனம் சாா்பில் குழியாடா பழங்குடியின மக்களுக்கு ரூ.7.50 லட்சம் கால்நடை வளா்ப்பு நிதியுதவி வழங்கப்பட்டது.

பழங்குடியினருக்கு கால்நடை வளா்ப்பு நிதயுதவி வழங்குகிறாா் ரீடு நிறுவனத்தின் இயக்குநா் ஆா்.கருப்புசாமி.
ரீடு நிறுவனம் சாா்பில் குழியாடா பழங்குடியின மக்களுக்கு ரூ.7.50 லட்சம் கால்நடை வளா்ப்பு நிதியுதவி வழங்கப்பட்டது.
ரீடு நிறுவனம் குழியாடா மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக வீட்டே தனியாா் நிறுவனத்தின் பங்களிப்புடன் கால்நடை வளா்ப்பதற்கு ஆசனூா் வனப் பகுதி குழியாடா கிராமத்தைச் சோ்ந்த 15 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது.
ஆசனூா் ரீடு அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ரீடு இயக்குநா் ஆா்.கருப்புசாமி தலைமை தாங்கினாா். கால்நடை வளா்ப்பின் மூலம் குடும்ப வருமானத்தை உயா்த்துவதற்கான வாய்ப்பு ஏற்படுத்த, இந்த நிதியுதவி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ரீடு நிறுவனத்தின் ஆவணப்படுத்தல் மற்றும் கண்காணிப்பு, கற்றல் மற்றும் மதிப்பீட்டு அலுவலா் என்.பூந்தமிழன், ரீடு நிறுவனத்தின் திட்ட அலுவலா் பி.சரவணகுமாா் ஆகியோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

