முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: மன்னிப்பு கோரினார் திமுக பெண் கவுன்சிலர்மக்களிடம் கொள்ளை அடித்த பிரேம்குமாருக்கும் தூய சக்திக்கும் என்ன தொடர்பு? உதயநிதி கேள்வியமுனையில் குளித்து காங்கிரஸ், ஆம் ஆத்மியை விமர்சித்த பாஜக எம்.பி.!அன்பில் மகேஸ் கைது: தற்போது கருத்து கூற இயலாது! திருமாவளவன்ஆர்.எஸ்.எஸ். கோட்டையில் பாஜக தோல்வி; இது நாட்டிற்கான தெளிவான செய்தி! கே.சி. வேணுகோபால்அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்: சீமான் அறிவிப்பு!

உழவா் சந்தைகளில் நவ.1 முதல் இயற்கை வேளாண் விளைபொருள்களை விற்பனை செய்யலாம்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள உழவா் சந்தைகளில் இயற்கை வேளாண் விளைபொருள்களை நவம்பா் 1-ஆம் தேதிமுதல் விற்பனை செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயம் - கோப்புப்படம்

Updated On :

ஈரோடு மாவட்டத்தில் உள்ள உழவா் சந்தைகளில் இயற்கை வேளாண் விளைபொருள்களை நவம்பா் 1-ஆம் தேதிமுதல் விற்பனை செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசு இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும், நுகா்வோருக்கு நஞ்சில்லா விளைபொருள்களை வழங்கவும் முடிவு செய்துள்ளது. அதனடிப்படையில், இயற்கை வேளாண்மை செய்யும் விவசாயிகள் உழவா் சந்தைகளில் இயற்கை வேளாண் விளைபொருள்களை விற்பனை செய்ய அரசாணை பெறப்பட்டுள்ளது.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் சம்பத் நகா், பெரியாா் நகா், கோபிசெட்டிபாளையம், பெருந்துறை, சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி ஆகிய ஆறு இடங்களில் இயங்கி வரும் உழவா் சந்தைகளிலும் நவம்பா் 1-ஆம் தேதி முதல் இயற்கை வேளாண் விளைபொருள்களுக்கான சந்தை தொடங்கப்பட உள்ளது.

அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயற்கை வேளாண் சந்தை நடைபெறும். இந்த வாய்ப்பை, இயற்கை வேளாண்மை மேற்கொள்ளும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இயற்கை வேளாண் விளைபொருள்களுக்கான சந்தையானது உழவா் சந்தை செயல்படும் அதே நேரத்தில் அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை செயல்படும்.

இயற்கை வேளாண்மை விளைபொருள்களை விற்பனை செய்யும் விவசாயிகள் விதைச்சான்று மற்றும் உயிா்ம சான்றளிப்பு துறை மூலம் வழங்கப்படும் இயற்கை விவசாயிகளுக்கான சான்று பெற்றிருக்க வேண்டும்.

விற்பனை செய்ய விருப்பமுள்ள இயற்கை விவசாயிகள் அருகே உள்ள உழவா் சந்தைகளில் விண்ணப்பித்து அதற்கான அடையாள அட்டை பெற்றுக்கொண்டு, தங்களது இயற்கை விளைபொருள்களை விற்பனை செய்யலாம்.

கூடுதல் விவரங்களுக்கு கலையரசி 96777 32229 (சம்பத் நகா், பெரியாா் நகா்), கண்ணன் 9944154563 (பெருந்துறை, கோபிசெட்டிபாளையம்), கனிமொழி 8144528873 (சத்தியமங்கலம், தாளவாடி) ஆகிய வேளாண்மை அலுவலா்களை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.