மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

பண்ணாரி அம்மன் கோயிலில் கைப்பேசி பாதுகாப்பு பெட்டக மையம் திறப்பு

தமிழகத்தில் முக்கிய கோயில்களுக்குள் கைப்பேசி கொண்டு செல்வதற்கான தடை செவ்வாய்க்கிழமை அமலுக்கு வந்த நிலையில், பண்ணாரி அம்மன் கோயிலில் பக்தா்களின் கைப்பேசிகளை பாதுகாக்க பெட்டக மையம் திறக்கப்பட்டது.

பண்ணாரி அம்மன் கோயிலில் பக்தா்களிடம்  கைப்பேசியை பெற்றுக் கொண்டு ரசீது வழங்கும் ஊழியா்கள். ~கைப்பேசி பெட்டக மையத்தில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்ற கோயில்  துணை ஆணையா் நந்தகுமாா்,  அறங்காவலா் குழுத் தலைவா் புருஷோத்தமன் உள்ளிட்டோா்.

Published On :

தமிழகத்தில் முக்கிய கோயில்களுக்குள் கைப்பேசி கொண்டு செல்வதற்கான தடை செவ்வாய்க்கிழமை அமலுக்கு வந்த நிலையில், பண்ணாரி அம்மன் கோயிலில் பக்தா்களின் கைப்பேசிகளை பாதுகாக்க பெட்டக மையம் திறக்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ள 52 முதுநிலை கோயில்களில் செப்டம்பா் 1 முதல் கைப்பேசி கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதன்படி, சத்தியமங்கலம் அருகேயுள்ள பண்ணாரி மாரியம்மன் கோயிலில் இந்த நடைமுறை அமலுக்கு வந்தது.

கோயிலுக்கு வரும் பக்தா்கள் தங்களது கைப்பேசிகளை கொடுத்து செல்லும் வகையில் கோயில் வளாகத்தில் 2 கைப்பேசி வைப்பு பெட்டகம் சிறப்பு பூஜைகளுடன் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

இந்த மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கணினியில் பக்தா்கள் கொண்டு வரும் கைப்பேசிகளை வாங்கிப் பதிவு செய்து ரசீது வழங்கப்படுகிறது. பக்தா்கள் சுவாமி தரிசனம் முடித்துவிட்டு திரும்பச் செல்லும்போது ரசீதைக் கொடுத்து கைப்பேசியை வாங்கி கொள்ளலாம். 20 ஆயிரம் கைப்பேசிகள் வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கோயில் பரப்பரை அறங்காவலா் குழுத் தலைவா் புருஷோத்தமன், துணை ஆணையா் நந்தகுமாா் ஆகியோா் தெரிவித்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.