கோத்தகிரி சாலையில் பட்டப்பகலில் இரும்புக் கம்பியால் பெண்ணைத் தாக்கிய கணவர் கைது
கோத்தகிரியில் குடும்பத் தகராறு காரணமாக பட்டப்பகலில் சாலையில் வைத்து இரும்புக் கம்பியால் பெண்ணைத் தாக்கிய கணவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.


கோத்தகிரியில் குடும்பத் தகராறு காரணமாக பட்டப்பகலில் சாலையில் வைத்து இரும்புக் கம்பியால் பெண்ணைத் தாக்கிய கணவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
கோத்தகிரி, கிளப் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் குமார், கட்டட ஒப்பந்ததாரராக உள்ளார். இவரது மகள் சுஜித்ராவுக்கும் (27) பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் 7 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது.
மணிகண்டன் கோத்தகிரியில் பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார். இவர்களுக்கிடையே கடந்த சில வருடங்களாகவே குடும்பத் தகராறு இருந்து வந்தது. இதைத் தொடர்ந்து, சுஜித்ரா கிளப் ரோடு பகுதியில் உள்ள தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றில் கணக்காளராகப் பணி புரிந்து வந்தார்.
இந்நிலையில் திங்கள்கிழமை காலை தனது அலுவலகத்தின் உள்ளே சுஜித்ரா சென்றபோது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த நபர் ஒருவர் இரும்புக் கம்பியால் அவரது தலையில் பலமாகத் தாக்கிச் சென்றுள்ளார்.
இச்சம்பவத்தை நேரில் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அந்த நபரைத் துரத்திய போது அவர் தனது மோட்டார் சைக்கிளைக் கைவிட்டு தப்பியோடியுள்ளார். தலையில் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த சுஜித்ராவை அப்பகுதி மக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதையடுத்து தப்பியோடிய நபரை பொதுமக்கள் உதவியுடன் காவல் துறையினர் தேடி வந்தனர். அவரை கோத்தகிரி பேருந்து நிலையம் அருகே மடக்கிப் பிடித்தனர். காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அவர் சுஜித்ராவின் கணவர் மணிகண்டன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த உதவி ஆய்வாளர் நசீர், மணிகண்டனைக் கைது செய்து சிறையில் அடைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...