சிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் விஜய்!பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!
/

பந்தலூர் அருகே யானைகள் தாக்கியதில் வீடு சேதம்

நீலகிரி மாவட்டம்,  பந்தலூர்அருகே சேரம்பாடி கிராமத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நுழைந்த யானைகள் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டை  தாக்கி சேதப்படுத்தின.

Updated On :23 ஜூலை 2018, 7:50 am IST

நீலகிரி மாவட்டம்,  பந்தலூர்அருகே சேரம்பாடி கிராமத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நுழைந்த யானைகள் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டை  தாக்கி சேதப்படுத்தின.
பந்தலூர் வட்டம், சேரங்கோடு ஊராட்சிக்கு உள்பட்ட மழவன் சேரம்பாடி கிராமத்துக்குள் குட்டிகளுடன் 6-க்கும் மேற்பட்ட யானைகள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை  4 மணிக்கு நுழைந்தன.
பின்னர் அவை,  அப்பகுதியில் உள்ள ராஜவேல் என்பவரது வீட்டை சுற்றிவளைத்து தாக்கின. சப்தம் கேட்டு ராஜவேல் குடும்பத்தினர் வெளியே எட்டிபார்த்தபோது,  வீட்டை யானைகள் சூழ்ந்து இடிப்பது தெரியவந்தது. உடனே அவர்கள் உதவிகேட்டு சப்தமிட்டதில்,  அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து யானையை விரட்டியதால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.