லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக மலைக் காய்கறிகள் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்து உள்ளதால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் விவசாயிகள் அதிக அளவில் மலைக்காய்கறிகளைப் பயிரிட்டு வருகின்றனர். அறுவடை செய்யப்படும் மலைக்காய்கறிகள் மேட்டுப்பாளையம், கோவை, அவிநாசி, திருச்சி, சென்னை, பெங்களூரு போன்ற பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.
நீலகிரியில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மலைக் காய்கறிகள் பயிரிடப்பட்டு அதிக மகசூல் காணப்படுகிறது. இந்நிலையில், லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக அறுவடை செய்வதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இதனால் காய்கறிகள் அழுகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் காய்கறிகள் விலை கடந்த 3 நாள்களாக அதிகரித்து வருகிறது. நகராட்சி மார்க்கெட்டில் பீட்ரூட் கிலோ ரூ. 35 முதல் ரூ.38 வரையும், உருளைக்கிழங்கு ரூ. 55 முதல் ரூ.65 வரையும், கேரட் ரூ.30 முதல் ரூ. 40 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.
முட்டைக்கோஸ் ரூ.12, பீன்ஸ்-ரூ.65, முள்ளங்கி-ரூ.20, டர்னீப்- ரூ.30, நூல்கோல்-ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை ஒரே நாளில் 20 ரூபாயில் இருந்து 26 ரூபாயாகவும், பெரிய வெங்காயம் ரூபாய் 22 ல் இருந்து 32 ஆகவும் விலை உயர்ந்து காணப்படுகிறது. லாரிகள் வேலை நிறுத்தம் தொடரும் பட்சத்தில் விலை கடுமையாக உயர வாய்ப்பிருப்பதாக விவசாயிகள் மற்றும் வர்த்தகர்கள் தெரிவித்தனர். காய்கறிகள் விலை கடுமையாக அதிகரித்து உள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சுயபரிசோதனை செய்யாமல் காங்கிரஸை விமர்சிப்பதா? - மாணிக்கம் தாகூர்
பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!

மத்திய அரசின் திட்டத்தின் மூலம் ரூ.25,000 வரை கல்வி உதவித் தொகை.. யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!

தக்கோலம் அகோர வீரபத்திர சுவாமி கோயிலில் ஜூன் 7-ல் கத்திரி பூஜை நிறைவு விழா!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK


