கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து தொழிலாளர்களும் நலவாரியத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும் என ஏஐடியூசி வலியுறுத்தி உள்ளது.
குந்தா தாலுகா ஏஐடியூசி கட்டிடத் தொழிலாளர்கள் சங்கக் கூட்டம் மஞ்சூரில் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஹரி தலைமை வகித்தார்.
இதில், தமிழகத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம், உடல் உழைப்பு தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்பு நலவாரியம் உள்பட தொழிலாளர்களின் நலனுக்காக அரசால் பல்வேறு நலவாரியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நலவாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்துள்ள தொழிலாளிக்கு பல்வேறு நலதிட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
எனவே, கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து தொழிலாளர்களும் நலவாரியத்தில் பதிவு செய்திருப்பது அவசியமாகும். இதுவரை நலவாரியத்தில் பதிவு செய்யாத தொழிலாளர்கள் உடனடியாக பதிவுசெய்ய வேண்டும். சங்கத்தின் சார்பில் கட்டுமானத் தொழிலாளர் சந்திப்பு இயக்கம் ஜூலை 30 ஆம் தேதி வரை நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் அம்பேத்கா் சிலை திறப்பு

ஜமாபந்தியில் பயனாளிகளுக்கு பட்டா அளிப்பு

அருள்மிகு பூங்காவனத்தம்மன் திருக்கோயில் குடமுழுக்கு

அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 10-ஆக உயா்வு: தனியாா் நிறுவனத்தில் ஆட்சியா் ஆய்வு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


