தமிழக அரசின் வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
,இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி:
தமிழக அரசின் வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித் தொகை பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கும் கூடுதலாக காத்திருப்பவர்களுக்கு உதவித் தொகை அளிக்கப்பட்டு வருகிறது. பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ. 200, தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 300, பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், அதற்கு சமமான
படிப்பு முடித்தவர்களுக்கு ரூ. 400, பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகளுக்கு ரூ. 600 என மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 30.06.18 அன்றோடு ஐந்து ஆண்டுகள் பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மனுதாரர்கள் 45 வயதுக்குள்ளும், மற்றவர்கள் 40 வயதுக்கு உள்பட்டவராகவும் இருக்க வேண்டும். வேலைவாய்ப்புப் பதிவினை விடுபாடின்றி புதுப்பித்திருக்க வேண்டும். ஏற்கனவே இத்திட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகள் பயன் அடைந்தவராக இருத்தல் கூடாது.
விண்ணப்பதாரர் அரசு, தனியார் துறையிலோ அல்லது வேலை வாய்ப்பிலோ ஈடுபட்டவராக இருத்தல் கூடாது. விண்ணப்பதாரர் பள்ளி அல்லது கல்லூரி கல்வியினை முழுவதுமாக தமிழ்நாட்டில் முடித்திருக்க வேண்டும். அல்லது பெற்றோர், கணவர், மனைவி, பாதுகாவலர் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் தமிழ்நாட்டில் குடியிருத்தல் வேண்டும். எனவே தகுதியுள்ள பதிவுதாரர்கள், இதுவரை விண்ணப்பம் பெறாதவர்கள் உடனடியாக மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மத்தியப் பிரதேச படகு விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்த சோகம்!

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |

தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிய... புதிய இணையதள முகவரி!

சிறுத்தை தாக்கி 3 ஆடுகள் பலி
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

